வி. வியஸ்காந்த் ஒரு சிறுவர் சிப்பாயாக அல்லாமல் கிரிக்கெட் நட்சத்திரமாக மாற்றியமைக்க, தமிழீழ விடுதலை புலிகளை தோற்கடித்தமைக்காக இலங்கைக்கு நன்றி
டிசம்பர் 21, 2020ஆங்கிலத்தில் ஷேனாலி வடுகே
தமிழீழ விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைவதற்கு பதிலாக எவ்வாறு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள், எத்தனை பேர் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதனை அறிய சர்வதேச சமூகம் ஆர்வமாக இருக்கும் வேளையில், இலங்கை, தன்னை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்துவதற்கும், விடுதலைப் புலிகளுக்கு பயந்து வாழ்ந்த மக்களுக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்குமான வழிவகைகளை தெரிவு செய்துள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் குழந்தை சிப்பாயாக இருந்த கோகுலன் ஒரு பாடல் நட்சத்திரமாக மாறினார், அதேபோன்று இப்போது எமக்கு இன்னுமொரு நட்சத்திரம் கிடைக்கப்பெற்றிருப்பதையிட்டு இலங்கை பெருமிதம் கொள்கிறது. அந்த நட்சத்திரம்தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயதான வி வியஸ்காந்த். போரில் பிரபாகரன் மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்கியிருந்தால், அற்புதமான சுழற்பந்து வீச்சாளரான வியஸ்காந்த், கைக்குண்டுகள் வீசுபவராகவும் ஏகே 47 துப்பாக்கியினை ஏந்துபவராகவும் காணப்பட்டிருப்பார்.
விஜயகாந்த் வியஸ்காந்த் 2001ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் திகதியன்று பிறந்தார். நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்துடன் பயங்கரவாதிகளுக்கு அதிகாரப்பூர்வமாக பிரதேசத்தை வழங்கிய பெப்ரவரி 2002ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர். போர் நிறுத்த ஒப்பந்தம் அவர்களினால் தமது படைகளை மீள ஒருங்கிணைப்பதற்கும், ஒரு பாரிய பிரச்சாரத்தின் மூலம் நிதி திரட்டுவதற்கும், இலங்கை படைவீரர்களை தாக்குவதற்கான திட்டமிடுதல்களை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. அது தமிழீழ விடுதலை புலிகளின் சிறுவர் படையினனருக்கு ஆட்சேர்ப்பு செய்வதை அதிகரித்த காலகட்டம், யுனிசெப் புள்ளிவிவரங்களில் குழந்தை படைவீரர்களை விடுவிப்பதாகக் கூறியது. மாவிலாறு அனைகட்டை மூடி, கிழக்கில் சுமார் 40,000 விவசாயிகளின் பயிர் செய்கைக்கான தண்ணீரை துண்டித்து போர்க்குற்றம் செய்ததன் விளைவாகவே, அனைகட்டை திறந்து வைக்க படையினர் அழைக்கப்பட்டனர். இது இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து கிழக்கு மாகாணத்தை விடுவிக்க வழிவகுத்தது. 2006ம் ஆண்டில், விஜயகாந்த் வியஸ்காந்திற்கு வெறும் 5 வயதுதான் இருக்கும். வியாஸ்காந்த் 8 வயதாக இருந்தபோது மே 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டனர். இந்த தமிழ் குழந்தைகளுக்கு பெற்றோருடன் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான உரிமையையும், கல்வி மற்றும் சுதந்திரத்திரமாக நடமாடித்திரியும் அவர்களின் அடிப்படை உரிமையையும் மறுத்து 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிறுவர் படையினராக ஆட்சேர்ப்பு செய்தது.
2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்படாது விட்டிருந்தால், வியஸ்காந்த் ஒரு கிரிக்கெட் நட்சத்திரமாக மாறும் நம்பிக்கையற்ற ஒரு குழந்தை சிப்பாயாக மாற்றப்பட்டிருப்பார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 30% சிறுவர் படைவீர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. அவர்களில் எத்தனை பேர் எந்த காரணமும் இல்லாமல் குழந்தைகளாக மரணத்தை எதிர்கொண்டனர், ஒரு சயனைடு குப்பியினைக் கடித்து செய்து தற்கொலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள். இந்த தருணத்தில் அவுஸ்திரேலிய செவிலியர் அடேல் நினைவுக்கு வருகிறார். 1970 களில் இருந்து 1990 களின் பிற்பகுதி வரை அவர் சிறுவர்களின் பிரதான பயிற்சியாளராக செயற்பட்டார். இதேவேளை அவர் இங்கிலாந்து திரும்பி மகிழ்ச்சியுடன் வசித்து வந்தார். இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்த இங்கிலாந்து, குழந்தைகளை தற்கொலை செய்து கொள்ள பயிற்சி அளித்த பெண் இங்கிலாந்தில் வசித்ததையிட்டு பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. புலிகள் இயக்கத்தில் அவர் வகித்த வகிபாகம் தொடர்பில் கேள்விக்குட்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை .
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எத்தனை சிறுவர் படைவீரர்கள் தங்கள் கனவுகளை சிதைத்தார்கள் - இந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறுவர் படையினரில் எத்தனை பேர் வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், கணக்காளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், தொழில்முனைவோர் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களாக வந்திருக்கலாம்.? அதற்கு பதிலாக நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் துப்பாக்கியைப் பிடித்து, ஒரு சயனைடு குப்பிகளை கடித்து காடுகளில் வாழ்ந்தனர்.
புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் - அப்பாவி குழந்தைகளின் மனதில் வெறுப்பை விதைக்கின்றது
வெளிநாட்டில் வசித்து கொண்டு பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடும் இந்த தமிழ் குழந்தைகளுக்கு பிரபாகரனின் குழந்தை வீரர்களாக இருந்த தமிழ் குழந்தைகளது வாழ்க்கை எப்படி இருந்தது என்று தெரியுமா? இந்த குழந்தைகள் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கின்றார்கள் - பிரபாகரனின் குழந்தை வீரர்கள் மக்களை சிதறல்களாக ஆக்கினர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான பிரச்சாரத்தை மேற்கொண்ட வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த புலிகள் வெட்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்களது குழந்தைகள் தனியார் / அரச பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்குச் சென்று உயர்ந்த தொழில்வாய்ப்பினை பெற்று , உயர் ரக ஆடைகளை அணிந்து விடுமுறை நாட்களை கழிக்கின்றனர் - ஆனால் வீடு திரும்பும் சக ஏழை மற்றும் தாழ்ந்த சாதி குளத்தைச் சேர்ந்த தமிழ் குழந்தைகள் கடத்தப்பட்டு, புலிகள் அனாதை இல்லங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு கொலை செய்வதற்கும் தற்கொலை குண்டுதாரியாக தன்னை மாய்த்துக் கொள்வதற்கும் பயிற்சியளிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்த புலிகள் நிதி திரட்டி அவற்றில் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கின்றனர் ஆனால் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை தமிழ் குழந்தைகள் முல்லைத்தீவின் காடுகளில் கஷ்டப்பட வேண்டியிருந்தது. அவர்கள் அணிந்திருந்த ஒரே ஆடை புலிகளின் சீருடைதான், ஆனால் அவையும் பல மாதங்களாக கழுவப்படாமல் இருந்தன.
தமிழ் சிறார்கள் இனி கடத்தப்பட்டு எல்.ரீ.ரீ.ஈ சிறுவர் படையினராக மாற்றப்படுவதில்லை. எனவே தமிழ் சிறுவர்களின் சுதந்திரத்திற்காக இலங்கை பிரஜைகளும் இலங்கை அரசாங்கமும் 2009 மே மாதம் 19ஆம் திகதியை வருடாந்தம் கட்டாயம் கொண்டாட வேண்டும்.
2009ஆம் ஆண்டு புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு பதிலாக வெற்றி பெற்றிருந்தால், இந்த இளம் கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் நட்சத்திரமாக இல்லாமல் 18 வயது குழந்தை சிப்பாயாக இருந்திருப்பார்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பற்றி தற்பெருமை காட்டும் சர்வதேச சமூகத்தில் உள்ள அனைவருக்கும் - எல்.ரீ.ரீ.ஈ புலம்பெயர்ந்தோருக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தின் மீது எல்.ரீ.ரீ.ஈ மலரை ஒளிரச் செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதைத் தவிர அவர்களின் விரல் சுட்டி மற்றும் எல்லை நிர்ணயம் என்ன என்பது அவர்களுக்கு ஒரு கேள்வி!
2009 ல் இலங்கை இராணுவத்தில் சரணடைந்த 594 சிறுவர் படையினருக்கும்> ஏனைய அனைவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டு> பின்னர் அவர்கள் பாடசாலைகளில் சேர்க்கப்பட்டு> அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நுழைய விரும்பும் எந்தவொருதுறையிலும்; பயிற்சி அளிக்கப்பட்டது. மறுபுறம் இலங்கை கோகுலன் மற்றும் வியஸ்காந்த் போன்ற நட்சத்திரங்களை பெருமையுடன் உருவாக்கியுள்ளது.
எல்.ரீ.ரீ.ஈ இயக்கம் முறியடிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடந்துள்ளன> புலிகளின் நிர்வாகத்திற்கு கீழ் இருந்ததைவிட வடக்கு> தற்பொழுது எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதைக் கண்டு தமிழர்கள் மகிழ்ச்சியடையலாம்.எல்.ரீ.ரீ.ஈ ஆண்டுக்கு 300 மில்லியன் டாலர் லாபம் ஈட்டும்போது> எல்.ரீ.ரீ.ஈ அல்லது எல்.ரீ.ரீ.ஈ புலம்பெயர்ந்தோர் வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு என்ன வசதிகளை செய்து கொடுத்தனர;. விடுதலைப் புலிகளை ஆதரித்த ஒரு சிலருக்கு மாத்திரமே புலிப் பயங்கரவாத ஆட்சியின கீழ் அனைத்துப் பலன்களையும் அனுபவித்தனர். குறைந்த பட்சம் ஒரு குடும்ப உறுப்பினர் வெளிநாட்டில் வசித்தாலும் எல்.ரீ.ரீ.ஈ தோற்கடிக்கப்பட்ட பின்னர் தான் அவர்கள் வீடு திரும்பவும் தங்கள் குடும்பங்களுக்கு உதவ முடிந்தது. முன்னைய காலங்களில் வெளிநாடுகளில் வசிக்கும் அனைவரும், அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாதாந்த அடிப்படையில் வரி கொடுக்க வேண்டியிருந்தது. எனவே , புலிகள் ஆதரவு புலம்பெயர்ந்தோர் அல்லது புலிகள் ஆதரவாளர்கள் அதனை ஏற்றுக் கொள்கின்றார்களோ இல்லையோ, புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே இங்குள்ள மக்களின் வாழ்க்கை சிறப்பாக மாறியது. தமிழ் சமூகத்தில் காணப்பட்ட ஏழைகள் மற்றும் தாழ்ந்த சாதியினருக்கு பகிர்ந்தளிக்காமல். புலிகளால் வழங்கப்பட்ட சலுகைகளை தனியாக சுயநலத்துடன் அனுவிக்க விரும்பிய ஒரு சிலர் மாத்திரமே எல்.ரீ.ரீ.ஈ தோல்வியால் கவலையடைந்தனர்.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ{க்காக அறிமுகமான 18 வயதுடைய எமது இளம் கிரிக்கெட் நட்சத்திரமான விஜயகாந்த் வியஸ்காந்த் பக்கம் திரும்பிபார்த்த இலங்கையர்கள் அனைவரும் அவரது ஒளிமையமான எதிர்காலத்திற்காக வாழ்த்துகிறார்கள். அதேபோன்று கிரிக்கெடடில் முன்னணி வீரராக திகழும் முத்தையா முரளிதரனையும் நாம் அனைவரும் விரும்புகிறோம், பெருமிதம் கொள்கிறோம். இவை அனைத்தும் தேசிய பொக்கிஷங்கள்.
குறுகிய மனம் படைத்தவர்கள் மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர், ஆனால் இலங்கையானது தடைகளை உருவாக்குவதை விட மக்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
- இந்த கட்டுரை இந்த இணைய தளத்திற்கு பங்களிப்பு செய்யும் எழுத்தாளரின் தமிழ் மொழியாக்கம் இதில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு எந்தப் பொறுப்பையும் ஏற்காது -