இலங்கை இராணுவத்தினரால் அலகல்ல மலையில் வீழ்ந்த
பல்கலைக்கழக மாணவர் மீட்பு

மார்ச் 11, 2024

611 வது காலாட் பிரிகேடின் 8 வது இலங்கை சிங்க படையணி படையினர் மார்ச் 10 ஆம் திகதி கேகாலை அலகல்ல மலையின் செங்குத்து சரிவில் விழுந்த பல்கலைக்கழக மாணவரை மீட்டனர்.

மார்ச் 09 ஆம் திகதி இரவு முகாம் பயணத்தில் ஈடுபட்டிருந்த வயம்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு, எதிர்பாராத விபத்தை எதிர்கொண்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவர்களில் ஒருவர் செங்குத்தான குன்றின் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார்.

தகவல் அறிந்ததும் 8 வது இலங்கை சிங்க படையணியின் பதில் கட்டளை அதிகாரி மேஜர் ஜி.சீ அபேநாயக்க யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் கட்டளையின் கீழ் 8 வது இலங்கை சிங்க படையணி படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், படையினர் உடனடியாக தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி அவரது உடல்நிலையை சீராக்கினர். மீட்கப்பட்ட மாணவர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நன்றி- www.army.lk