541 வது காலாட் பிரிகேடினால் மீள் சவ்வூடுபரவல் குடிநீர் திட்டம்

மார்ச் 12, 2024

541 வது காலாட் பிரிகேட் படையினர் 06 மார்ச் 2024 அன்று பிரிகேடில் மீள் சவ்வூடுபரவல் குடிநீர் அமைப்பை சமீபத்தில் திறந்து வைத்தனர்.

இந்த அபிவிருத்தியானது முப்படையினர், பிரதேசத்தில் வசிப்பவர்கள் மற்றும் மன்னாரிலிருந்து யாழ். வரை ஏ32 வீதியில் பயணிக்கும் பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. 541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பி.வை.சி பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 541 வது காலாட் பிரிகேட் படையினரின் உதவியினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது பிரதேசத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பல பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நன்றி- www.army.lk