நேபாளத்தில் ஐ.நா களப் பயிற்சி சாந்தி பிரயாஸ்- IV இல் இராணுவ படையினர்
மார்ச் 12, 2024சாந்தி பிரயாஸ் - IV களப் பயிற்சி நேபாள ஆயுதப் படைகளால் அமெரிக்க இந்து-பசுபிக் கட்டளையின் கீழ் உலகளாவிய அமைதி நடவடிக்கை முன்முயற்சியின் இணை அனுசரணையுடன் நடத்தப்பட்டது. இது நேபாளத்தில் உள்ள பிரேந்திரா அமைதி நடவடிக்கை பயிற்சி நிலையத்தில் பெப்ரவரி 2024 மார்ச் 04 முதல் 20 வரை நடைபெற்றது.
பன்னிரண்டு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த படையினர் இந்தப் பயிற்சியில் பங்கேற்றதுடன், இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, இரண்டு அதிகாரிகள் மற்றும் பத்தொன்பது சிப்பாய்கள் சாந்தி பிரயாஸ் - IV பயிற்சியில் பங்கு பற்றினர்.
லெப்டினன் கேணல் எம்.ஏ.ஏ.பீ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் மேஜர் கேஎன்எஸ் மெண்டிஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இப்பயிற்சியில் பங்கேற்பதற்கு முன்னர் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் ஒத்திகை பாடநெறி நடாத்தப்பட்டது.
இப்பயிற்சியின் நோக்கங்கள் தந்திரோபாய அளவிலான அமைதி நடவடிக்கை பயிற்சியை மேம்படுத்துதல் மற்றும் நிறுவன தந்திரோபாயங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை பரிமாற்றம் செய்து, தந்திரோபாய அமைதி நடவடிக்கைகளில் பன்னாட்டு இயங்குநிலையை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் பயிற்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
நன்றி- www.army.lk