பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் யாழ். படையினருக்கு உரை

மார்ச் 12, 2024

கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் அவர்கள் யாழ் விமான படை கண்காட்சிக்கு செல்கையில் 09 மார்ச் 2024 அன்று பலாலி விமான நிலையத்தில் யாழ் பாதுகாப்புப் படை தலைமையக படையினருக்கு உரை நிகழ்தினார்.

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் வருகை தந்த இராஜாங்க அமைச்சரை அன்புடன் வரவேற்றதுடன், இராணுவத்தினரின் முன்னேற்றத்திற்காக சரியான நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததற்காக தனது நன்றியினை தெரிவித்தார்.

உரையின் போது, படையினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அமைச்சர், படையினருக்கு அரசாங்கம் வழங்கிய அனைத்து நலன்புரி வசதிகள் குறித்தும் விளக்கினார். இராணுவத்தினரின் எதிர்கால தொழில் முன்னேற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார்.

இறுதியில் யாழ் தளபதி இராஜாங்க அமைச்சருக்கு பாராட்டுச் சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கினார். இராஜாங்க அமைச்சர் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னதாக, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் விருந்தினர் பதிவேட்டில் தனது பாராட்டுக் குறிப்புகளையும் பதிவிட்டார்.

கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் பலாலி இராணுவ வளாகத்தின் 'உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்' அமைந்துள்ள ஏழு கோவில்களை நேரில் பார்வையிடும் கள விஜயத்திலும் கலந்து கொண்டார். அவை உரிய நேரத்தில் இந்து பக்தர்களுக்காக விடுவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடதக்கதாகும்.

மாலையில், இராஜாங்க அமைச்சர் 51 வது காலாட் படைப்பிரிவில் உள்ள சிமிக் பூங்காவிற்குச் சென்று அதன் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டதுடன், பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்று, அவர்களுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதுடன் சிறார்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கினார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.

நன்றி- www.army.lk