சீன அரசினால் சிறப்பு வெடிகுண்டுகளை அகற்றும்
கருவி இராணுவத்திற்கு வழங்கப்பட்டது

மார்ச் 14, 2024

சீன இராணுவ மானியத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட விசேட வெடிபொருட்களை அகற்றும் உபகரணங்களை இலங்கை இராணுவத்தினர் இன்று (மார்ச் 13) சீன மக்கள் குடியரசின் தூதுவர் மேன்மைதாங்கிய கியூ சென்கொங் மற்றும் இராணுவத் தலைமையகத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஎச்கேஎஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ மற்றும் இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் கேணல் காவோ பின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

அன்றைய நிகழ்வின் தொடக்கத்தில், இரு நாடுகளின் இராணுவத்தினரிடையே நிலவும் நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வை வெளிப்படுத்தும் ஒரு சிறிய வீடியோ ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, உபகரணங்களை வழங்குவது தொடர்பான ஆவணங்களில் முறையான கையொப்பமிடுதல் நிகழ்வு இராணுவத் தலைமையகத்தில் மேன்மைதங்கிய கியூ சென்கொங் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் ஆகியோருக்கு இடையே நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, பதினெட்டு REOD 4000 வெடிகுண்டு அகற்றும் நடுத்தர ரோபோக்கள், பதினெட்டு REOD 400 வெடிக்கும் ஆயுதங்களை அகற்றும் ரோபோக்கள், 10 வெடிப்பு எதிர்ப்பு போர்வைகள் மற்றும் 10 வெடிப்பு பாதுகாப்பு தாங்கிகள் மற்றும் வாகனங்கள் அடையாளமாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்களிடம் மேன்மைதங்கிய கியூ சென்கொங் அவர்களால் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவற்றை இராணுவத் தளபதியிடம் வழங்கினார்.

தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள், இலங்கை ஆயுதப்படைகளுக்கு மிகவும் பயன்படும் அந்த புதிய உபகரணங்களை உன்னிப்பாகப் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நன்றி- www.army.lk