இலங்கை இராணுவம் அபார வெற்றிகளுடன் சம்பியனாக தெரிவு
மார்ச் 18, 2024மஹரகம தேசிய இளைஞர் நிலையத்தில் மார்ச்11 முதல்13 வரை இலங்கை தேசிய வுஷூ கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 18வது தேசிய வுஷூ போட்டியின் சம்பியன்ஷிப் மற்றும் இலங்கை உயிர்காப்பு சங்கத்தினால் (SLASU) மார்ச்15 மற்றும்16 ஆம் திகதிகளில் கல்கிசை கடற்கரையில் நடத்தப்பட்ட 84வது டூ மைல் கடல் நீச்சல் சாம்பியன்ஷிப்பின் போட்டிகளில் இராணுவ போட்டியாளர்கள் போட்டியின் அனைத்து சம்பியன்ஷிப்பையும் பெற்றுக் கொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
18வது தேசிய வுஷூ போட்டியில் 41 இராணுவப் போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் இராணுவ அணி 'சண்டா' பிரிவில் 06 தங்கம், 09 வெள்ளி மற்றும் 06 வெண்கலப் பதக்கங்களையும் 'தாவுலு' பிரிவில் 07 தங்கம், 04 வெள்ளி மற்றும் 06 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட நீச்சல் கழகங்கள் மற்றும் பாடசாலைகள் உட்பட 47அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 450க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மத்தியில் இராணுவ நீச்சல் வீரர்கள் 84வது வருடாந்த இரண்டு மைல் கடல் நீச்சலில் சம்பியனாக வெற்றிபெற்றுள்ளனர். இராணுவ நீர் விளையாட்டு அணியானது முப்படைச் சேவைகள் சம்பியன்ஷிப் மற்றும் ஆண்களுக்கான போட்டியின் ஒட்டுமொத்த சம்பியன்ஷிப் ஆகியவற்றைப் பெற்று, அதிகூடிய மொத்த புள்ளிகளைப் பெற்றுக்கொண்டதாக மேலும் தெரிவிக்கின்றன.