யாழ். விவசாயிகளுக்கு 235 ஏக்கர் காணி கையளிப்பு

மார்ச் 23, 2024

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள 235 ஏக்கர் காணியை 2024 மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது இலங்கை இராணுவம் அதன் உரிமையாளர்களிடம் கையளித்தது. இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி எம்பில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அன்றைய தினம் பிரதம விருந்தினர் விடுவிக்கப்பட்ட காணியில் வாழை கன்று ஒன்றை நட்டு விவசாயத்துறை நவீனமயமாக்கல் செயற்திட்டத்தின் ஆரம்பத்தை அடையாளப்படுத்தினார். மேலும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி அவர்கள் வருகை தந்ததன் அடையாளமாக புளியங்கன்று ஒன்றை நட்டினார்.

நிகழ்வின் போது, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் விடுவிக்கப்பட்ட காணியின் உத்தியோகபூர்வ ஆவணத்தை ஜனாதிபதி அவர்களிடம் வழங்கியத்துடன் அதனை பதில் மாவட்ட செயலாளர் திரு.எம்.பிரதீபன் அவர்களிடம் ஜனாதிபதி கையளித்தார்.

மேலும், 327 குடும்பங்களில் 20 குடும்பங்கள் விடுவிக்கப்பட்ட காணியில் விவசாயம் மற்றும் தோட்டத்தொழில்களை தொடங்குவதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை அதிமேதகு ஜனாதிபதியிடமிருந்து அடையாளப்பூர்வமாகப் பெற்றுக் கொண்டனர்.

அதன் பின்னர் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்ததுடன், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையத் தளபதியினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. வளாகத்தை விட்டு செல்வதற்கு முன், அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புக்களை எழுதினார்.

நன்றி  - www.army.lk