நாமினிஓயா மொண்டி கொபல்லாவ மாதிரி ஆரம்பப் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிப்பு

மார்ச் 25, 2024

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய மாகாண சபையின் 7.6 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வில்கமுவ நாமினிஓயா மொண்டி கொபல்லாவ மாதிரி ஆரம்பப் பாடசாலையின் இரண்டு மாடிக் கட்டிடம் இன்று (மார்ச் 25) இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில அவர்களின்  மேற்பார்வையுடனும் மற்றும் திணைக்கள அதிகாரிகளின் தொழில்நுட்ப பங்களிப்புடனும் இந்த புதிய கட்டிடத்தின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் புதிய வசதியினால் நாமினிஓயா ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாரியளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், மகா சங்கத்தினர், மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் செயலாளர் மேனகா ஹேரத், மொண்டி கொபல்லாவ ஆரம்பப் பாடசாலையின் அதிபர் ஐ.ஜி. ஆரியசிங்க, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.