பாதுகாப்புச் தலைமையக கட்டிட தொகுதிக்கு
பாதுகாப்பு செயலாளர் கண்காணிப்பு விஜயம்

மார்ச் 25, 2024

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் அகுரேகொடவில் அமைக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிட தொகுதிகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயவென அப்பகுதிக்கான கண்காணிப்பு வியமொன்றினை இன்று மார்ச் 25 ஆம் திகதி மேற்கொண்டார்.

குறித்த திட்டத்தின் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரி அலுவலகம், இலங்கை கடற்படைத் தலைமையகம் மற்றும் முன்னாள் படைவீரர் சங்க வளாகம் ஆகியவற்றின் கட்டுமானப் பகுதிகளை பார்வையிட்டார்.

திட்டத்தின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரொஹான் பத்திரகே, திட்டத்தின் முன்னேற்றம் குறித்து செயலாளருக்கு இதன்போது விளக்கமளித்தார். நிர்மாணப்பணிகளை விரைவு படுத்துவதற்கு அவசியமான அறிவுறுத்தல்களையும் பாதுகாப்பு செயலாளர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கிவைத்தார்.

மேலதிக  செயலாளர் (தொழில்நுட்பம்) பொறியியலாளர் திருமதி டபிள்யூ ஆர் என் ஆர் பிரேமச்சந்திர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர ஆகியோரும் இந்த விஜயத்தின் போது இணைந்து கொண்டனர்.