இந்தோனேசிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
மார்ச் 25, 2024இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் அதிமேதகு Dewi Gustina Tobing இன்று (மார்ச் 25) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இந்தோனேசிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால ஒத்துழைப்பையும் இருதரப்பு உறவுகளையும் மேலும் மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இந்த சந்திப்பின் போது சுமுகமாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், இராணுவப் பயிற்சி மூலோபாய கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு முன்முயற்சிகள் உள்ளிட்ட பரஸ்பர முக்கியமான துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தல் குறித்தும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதரவும் கலந்துகொண்டார்.