இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது
மார்ச் 28, 2024இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று கொழும்பில் நடைபெற்றது. போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC) மற்றும் இலங்கை கடற்படை (SLN) இணைந்து நடத்தும் இரண்டு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமாகி யதாக கடற்படை ஊடகம் தெரிவிக்கிறது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் பங்கேற்புடன் “கட்டுப்பாடற்ற நீர்நிலைகளை பட்டியலிடுதல்: இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் அமைந்துள்ள UNODC குளோபல் கடல்சார் குற்றத் திட்டத்தின் தலைவர் திருமதி சிறி பிஜூனே, இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம்-செயல்பாடுகள், ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் மற்றும் UNODC பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.