“நேரப் பற்றாக்குறை” எனும் சொல்லினை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது

டிசம்பர் 22, 2020
  • இசை சார்ந்த ஒலி படைப்புகளில் சிறிய வணிக இலாபங்கள் இருந்தபோதிலும் அவைகள் எப்போதும் இதயத்துடன் பேசும் தன்மை வாய்ந்தன
  • இளைய தலைமுறை, பாடத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடவும், அவர்களின் உள்ளார்ந்த திறமைகளை அங்கீகரிக்கவும் ஊக்கப்படுத்துங்கள்

கால வரையறை என்பது  ஒரு கலைப்படைப்பு / எழுத்தாக்கம்  ஒன்றினை உருவாக்குவதற்கு எவ்விதத்திலும் ஒரு தடையாக அமையாது  என பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.  தன்னால் இன்றுவரை எழுதி  வெளியிடப்பட்ட புத்தகங்கள் தொடர்பான சொந்த தனது அனுபவங்களை பகிரும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு நூலாசிரியரின் பொறுப்பு தொடர்பாக வலியுறுத்தும் போதே அவர்  "ஆராய்ச்சி அடிப்படையிலான, தொலைநோக்கு மற்றும் வளமான கலை படைப்புகளைக்கொண்டு சிறந்த சமூகத்தை வளர்ப்பதே ஒரு கலைஞனின் அல்லது ஒரு நூலாசிரியரின் பங்காகும்" என குறிப்பிட்டார்.

சமகால நாவலாசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களை கௌரவிக்கும் வகையில் இன்று (டிசம்பர், 22) கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே  மேஜர் ஜெனரல் குணரத்ன  இவ்வாறு தெரிவித்தார்.

தரமான  படைப்புகளின் பெறுமதி தொடர்பாக விளக்கமளித்த பாதுகாப்பு செயலாளர், "நுண்கலை படைப்புகள் மற்றும் எழுத்தாக்கங்கள் ஆகியவை வாசகர்களின் மனதில் எப்போதும் ஒரு அமைதியினை  கொண்டுவருவனவாகும்" என குறிப்பிட்டார்.  
“இசை சார்ந்த ஒலி படைப்புகளில் சிறிய வணிக இலாபங்கள் இருந்தபோதிலும் அவைகள் எப்போதும் இதயத்துடன் பேசும் தன்மை வாய்ந்தன" என அவர் தெரிவித்தார்.

முன்னாள் புகழ்பெற்ற இலங்கை எழுத்தாளர்களை உதாரண புருஷர்களாக நினைவு கூர்ந்த அவர், "அவர்களின் புகழ்பெற்ற கலைப்படைப்புக்கள் காரணமாகவே அவர்களின் பெயர்கள் இன்னும் எம்மால் நினைவு கூறப்படுகின்றன" என குறிப்பிட்டார்.

சமகால எழுத்தாளர்களை கௌரவிக்கும் இவ்வாறான நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்தமைக்காக கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீப் யசரத்னவுக்கும் அவரது ஊழியர்களுக்கும் மேஜர் ஜெனரல் குணரத்ன இதன்போது தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

அத்தகைய கலைத் திறமைகள் உள்ள தனிநபர்களுக்கு கை கொடுக்க வேண்டியது நமது கடமை, மேலும் அவர்கள் உலகளாவிய தளங்களை அடையும் வழிகளை நாம் திறந்து கொடுக்க  வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புகழ்பெற்ற கலைபடைப்புகள் மற்றும் கவிதைகளைக்கு வித்திட்ட கோட்டே இராச்சியத்தின் இலக்கிய பொற்காலம் தொடர்பாக கோடிட்டுக்காட்டிய அவர் , புதிய தலைமுறையை எழுதவும், சிறந்த கலைபடைப்புகளை உருவாக்கவும் அனைவரையும் ஊக்குவிக்கவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், இளைய தலைமுறையினரின் உள்ளார்ந்த திறமைகளை அங்கீகரித்து, சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதற்கு ஊக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில், மகா சங்கத்தினர், பொது நிர்வாக அமைச்சின் ஆலோசகர் மஹிந்த மதிஹஹேவா, மேல் மாகாண கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகாரம், கலாசார மற்றும் கலை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் சிரிசோம லொகுவிதான, பிராந்திய, அரச அதிகாரிகள், அதிதிகள், கலைஞர்கள், நூலாசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.