முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

ஏப்ரல் 03, 2024

சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய 2024.04.20ஆம் திகதி முதல் 2024.05.20ஆம் திகதி வரையான ஒரு மாத கால பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
1.    மேலும், ஏதேனும் செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருப்பவர்கள் மாத்திரம் அதை சட்ட ரீதியில் விளகிக்கொல்வதற்கு முன்னர் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

2.    இந்த பொது மன்னிப்பானது 2024.04.02ஆம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் தொடர்பில் மாத்திரம் செல்லுபடியாகும்.
 
3.   தற்போது வெளிநாட்டில் உள்ள முப்படை வீரர்கள் பின்வரும் நிபந்தனைகளுக்கு இணங்க அந்தந்த படைப்பிரிவுகளுக்கு பிரசன்னமாகாமல் சேவையில் இருந்து விடுவிப்பு பெற முடியும்.

    a.        சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்ள விரும்புவோர், அனுமதியற்ற விடுப்பில் இருந்த குற்றத்தைத் தவிர, அவர்களுக்கு எதிராக எந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளும் நிலுவையில் இருக்கக்கூடாது.
 
     b.      அவர்கள் மோசடியாகத் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை உபயோகித்து அல்லது சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என்பதை குடிவரவுத் திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
 
   c.       அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய வெளிநாட்டுப் கற்கைநெறிகள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களால் முப்படைகளுக்கு வழங்கப்படும் கற்கைநெறிகள் மற்றும் இராஜதந்திர பணிகள் அல்லது வேறு ஏதேனும் தேவைகளுக்காக வெளிநாடு சென்று உரிய காலப்பகுதிக்குள் நாடு திரும்பத் தவறியவர்களுக்கு இந்த பொதுமன்னிப்பு பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.