இலங்கையின் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் புதிய இலச்சினை வெளியிடப்பட்டதுடன் அதன் பணிக்குழுவினருக்கான பாராட்டு சான்றிதழ்களும் வழங்கிவைப்பு
ஏப்ரல் 03, 2024நாட்டில் மனித ஆட்கடத்தலை இல்லாதொழிப்பதில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணி, அதன் அடையாளத்தை வலுப்படுத்தும் நோக்கில் அதன் அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்புடன் இன்று (ஏப்ரல் 03) பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் உத்தியோகபூர்வ இலச்சினை வெளியிடப்படும் வரலாற்று நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பணிக்குழுவின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன அவர்களினால் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்த புதிய இலச்சினையானது மனித கடத்தலுக்கு எதிரான இடைவிடாத போராட்டத்தையும், பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்கான கூட்டு உறுதியையும் அடையாளப்படுத்துகிறது. முக்கியமான வெளியீட்டைத் தொடர்ந்து, இந்நிகழ்வு விரிவான கலந்துரையாடல் மற்றும் மூலோபாய திட்டமிடலுக்கான தளமாக நடைபெற்றது.
இந்நிகழ்வானது, தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணி எதிர்கொள்ளும் அழுத்தமான சவால்களை நிவர்த்தி செய்தது மட்டுமன்றி, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான ஆட்கடத்தல் அறிக்கையில் இலங்கையின் நிலைப்பாட்டை 2ஆம் நிலைக்கு உயர்த்துவதில் முக்கிய பங்காற்றிய நபர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது.
பணிக்குழுவில் உள்ள முக்கிய நபர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் குறிப்பிடத்தக்க செயற்பாடுகளை அங்கீகரித்து அவர்களுக்கான பாராட்டு கடிதங்களும் இதன்போது விநியோகிக்கப்பட்டன.
இந்த பங்குதாரர் நிகழ்வு, புதிய இலச்சினையை வெளியிடுவதன் மூலம் சிறப்பிக்கப்பட்டதுடன், இதுவரையிலான பணியைப் பிரதிபலிக்கும் மற்றும் எதிர்கால தொலைநோக்குப் பற்றி கேட்டறியும் இரண்டு நோக்கங்களையும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேசிய மனித கடத்தல் எதிர்ப்பு பணிக்குழுவின் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு எதிர்கால முயற்சிகளில் இறங்குவதால், இந்த புதிய இலச்சினை, தேவையுடையவர்களின் வாழ்க்கையில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்த தேவையான தொலைநோக்கு பரிமாற்றம் மற்றும் கூட்டு முயற்சிகளின் நிலையான நினைவூட்டலாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.