களுத்துறையில் அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடர்பில் கடற்படையினரால் செயலமர்வு
ஏப்ரல் 04, 2024களுத்துறையில் உள்ள அனர்த்த முகாமைத்துவக் குழு உறுப்பினர்களிடையே பேரிடர் அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேம்படுத்தும் செயலமர்வு அண்மையில் இலங்கை கடற்படையினரால் நடாத்தப்பட்டது. இந்த அவசரகால பதில், அடிப்படை முதலுதவி மற்றும் உயிர்காக்கும் செயலமர்வு களுத்துறையில் உள்ள விரைவு நடவடிக்கை படகு அணி (RABS) பயிற்சி அலகு (RRTA) மற்றும் களுத்துறையில் உள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு (DDMCU) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் களுத்துறை கடற்கரையில் நடைபெற்றது.
மார்ச் 19 முதல் 29 வரை நடைபெற்ற இந்த செயலமர்வு களுத்துறையில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் உள்ள அனர்த்த முகாமைத்துவக் குழு உறுப்பினர்களிடையே அவசரகால சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டிய அனைத்து அம்சங்களிலும் தயார்நிலையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு அமைந்திருந்தது.
மற்றொரு நிகழ்ச்சியில், RABS RRTA களுத்துறை மற்றும் DDMCU களுத்துறை ஆகியவற்றால், தொடங்கொடை பிரதேசவாசிகள் குழுவொன்றிற்கு அடிப்படை முதலுதவி மற்றும் உயிர்காக்கும் பயிற்சி நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதன் போது அடிப்படை முதலுதவி மற்றும் உயிர்காப்பு பற்றிய தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .