யாழ்.பூநகரினில் புத்தாண்டு கொண்டாட்டம்

ஏப்ரல் 08, 2024

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாக் காலம் பூநகரினில் 55 வது காலாட் படைப்பிரிவில் 05 ஏப்ரல் 2024 அன்று நடைப்பெற்றது. யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் அறிவுறுத்தல் மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டலில் 552 வது காலாட் பிரிகேட் படைப்பிரிவினால் இலங்கை பொலிஸ் – பூநகரி, பிரதேச செயலகம் - பூநகரி மற்றும் வர்த்தக சமூகம் - பூநகரி ஆகியோருடன் இணைந்து இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் தமிழ்மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இராணுவத்துடன் கைகோர்த்து விழாவை கொண்டாடினர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாலை நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி 551, 552 மற்றும் 553 வது காலாட் பிரிகேட் தளபதிகள்,அதிகாரிகள்,சிப்பாய்கள், பூநகரி பிரதேச செயலாளர், அருட்தந்தை நிலான் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

புத்தாண்டு விழாவின் முடிவில், பல்வேறு நிகழ்வுகள்/போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு யாழ். தளபதி மற்றும் பல அழைப்பாளர்கள் பரிசுகளை வழங்கினர். நிகழ்வில் இறுதியில் இரவு வண்ணமயமான இசை நிகழ்ச்சி ஆரங்கேற்றப்பட்டது.

நன்றி - www.army.lk