எதிர்காலத் தலைவர்களுக்கு ஊக்கமளிக்கு வகையில் உதவித்தொகை வழங்கல்

ஏப்ரல் 08, 2024

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய இரண்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 2024 ஏப்ரல் 5 ஆம் திகதி கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் விழா நடைபெற்றது.

இரண்டு திறமையான மாணவர்களின் தொடர்ச்சியான கல்விக்கு உத்தரவாதம் அளிக்கும் இரண்டு புலமைப்பரிசில்களுக்குத் தேவையான நிதியை நன்கொடையாளர் திரு.மேவன்ஜெயதிலக்க அவர்கள் வழங்கினார். இந்த புலமைப்பரிசில்களைப் பெற்றவர்கள் பொலன்னறுவை சுசிரிகம ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர் எம்.கே.கவிஷ்கதேசான் ஆரியரத்ன, அவர் 162 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 150 புள்ளிகளைப் பெற்ற பொலன்னறுவை அலவகுபுர மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ஆர்பீடிஎஸ்எஸ் சாவிந்தி விக்கிரமசிங்க ஆகியோர் ஆவர்.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் ஏஎச்ஏடி ஆரியசேன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி,சிரேஷ்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி - www.army.lk