தேசிய மாணவர் படையினருக்கு புதிய பயிற்சி மையம்

ஏப்ரல் 08, 2024
  • பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்

முல்லைத்தீவில் புதிதாக நிறுவப்பட்ட தேசிய மாணவ படையணியின் இரண்டாவது பயிற்சி நிலையத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழா (ஏப்ரல் 07) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் மகா சங்கத்தினர் உட்பட இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உரையாற்றுகையில் தேசிய மாணவ படையணியின் முக்கிய நோக்கம், அனைத்து வகையான திறன்களையும் கொண்ட சிறந்த இளைஞர்களை உருவாக்குவதே என்று தெரிவித்தார். இங்கு பயிற்சி பெரும் மாணவர் படையணியினர் நேரான சிந்தனையுடன்கூடிய தாய்நாட்டை நேசிக்கும் பெறுமதிமிக்க மனித வளமாக காணப்படுவார்கள் என குறிப்பிட்டார்.

ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகளின் வரலாற்றைக் கொண்ட தேசிய மாணவ படையணி, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் பொறுப்புகளை ஏற்கக்கூடிய மனிதாபிமான மற்றும் ஆரோக்கியமான தலைமுறையை நாட்டுக்கு உருவாக்கும் நோக்கில், ஒரு நாட்டின் எதிர்காலமாக இருக்கும் மாணவர்களுக்கிடையில், தன்னம்பிக்கை மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவற்றால் செழுமைப்படுத்தப்பட்ட தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள உதுவுகிறது. கடந்த வருடம் தேசிய மாணவ படையணிக்கு ஜனாதிபதி வர்ணம் கௌரவ ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய நாடிலுள்ள அனைத்து தேசியப் பாடசாலைகளிலும் ஒரு கெடெட் பிரிவை உருவாக்குதல் என்பதற்கமைய தேசிய மாணவ படையணியின் ஒரே பயிற்சிப் நிலையமான ரண்டம்பே தேசிய மாணவர் படை பயிற்சிப் நிலையத்திற்கு மேலதிகமாக இந்தப் பயிற்சி நிலையத்தை உருவாக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் வடக்கு-கிழக்கு மற்றும் தெற்கிற்கிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் கட்டமைப்பிற்குள் நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப முடியும் என கெளரவ தென்னகோன் மேலும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில், பயிற்சிகள் மூலம் ஒழுக்கத்தை மேம்படுத்துதல் என்ற கருத்தின்படி தேசிய மாணவ படைப்பிரிவை மறுசீரமைத்து வலுப்படுத்தும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள பாடத்திட்டத்தை சீர்திருத்துவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வட பிராந்தியத்தில் தேசிய மட்டத்தில் தகுதி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களை அமைச்சர் வழங்கி வைத்ததுடன், வட பிராந்தியத்தில் புதிதாக நிறுவப்பட்ட தேசிய மாணவ பிரிவுகளின் பாடசாலைகளின் அதிபர்களுக்கான கெடட் அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, தேசிய மாணவ படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுதந்த பொன்சேகா, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பேட்ரிக் டிரஞ்சன், மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்டஸ், சிரேஷ்ட முப்படைகளின் அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.