வைரஸ் தொற்றுக்குள்ளான 618 பேர் நேற்றைய தினம் குணமடைவு
டிசம்பர் 23, 2020கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 38,058ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 193 பேரும், கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 101 பேரும், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 42 பேரும், ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 91 பேரும் உள்ளடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34,377 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 25,892 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
நாட்டில் 11,617 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 101 இலங்கையர்கள் வெளிநாட்டிலிருந்து வருகை தந்துள்ளனர். அவர்களில் 44பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திளிருந்தும் 24 பேர் கட்டாரிலிருந்தும் 14 பேர் இந்தியாலிருந்தும் 14 பேர் மாலைதீவிலிருந்தும் 05 பேர் இந்தோனேசியாவிலிருந்தும் வருகை தந்தனர். இவர்கள் அனைவரும் முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் இராணுவத்தினரால் மேற்பார்வை செய்யப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வைரஸ் தொற்றிலிருந்து குனமடைந்த 618 பேர் நேற்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குனமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,299 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 72 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 8,517 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தாகம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளது.