சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளை சம்பிரதாய பூர்வமாக மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பங்கேற்பு

ஏப்ரல் 16, 2024

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, பாரம்பரியங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அந்தவகையில், பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இன்று காலை (ஏப்ரல் 16) ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு தேனீர் விருந்தில் கலந்துகொண்டனர்.

புத்தாண்டின் பின்னர், சம்பிரதாயப்படி புத்தாண்டு தேநீர் விருந்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்வது மரபு, மேலும் ஜெனரல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பணிபுரியும் ஊழியர்களும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றி இந்த நிகழ்வில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாரம்பரிய நிகழ்வின்போது ஜெனரல் குணரத்ன சிவில் மற்றும் இராணுவ ஊழியர்களுடன் இணைந்து தனது புத்தாண்டு கொண்டாட்ட மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். மேலும் பாதுகாப்பு அமைச்சின் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பு செயலாளருக்கு தங்கள்  புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், பின்னர் அமைச்சின் ஊழியர்கள் சுப நேரத்தில் அவர்களது பணிகளை ஆரம்பித்தனர்.