--> -->

முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

ஏப்ரல் 19, 2024

சட்டரீதியான விடுப்பு இன்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்களுக்கு 20.04.2024 முதல் 20.05.2024 வரை சட்டரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலம், கடமைக்கு சமூகமளிக்காத அதிகாரவானை முப்படை அதிகாரிகளுக்கு பொருந்தாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

1.    31.12.2023 அன்று அல்லது அதற்கு முன் சட்டரீதியான விடுப்பு இன்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படைகளின் ஏனைய தரநிலை வீரர்களுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்.

2.    இந்த பொது மன்னிப்பு காலமானது சட்டரீதியான விடுப்பு இன்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படையின் அதிகாரவானை அதிகாரிகளுக்கு பொருந்தாது.

3.    இந்த பொது மன்னிப்புக் காலத்தில், பின்வரும் துறைகளில் பொது நிதியைப் பயன்படுத்தி வழங்கப்படும் சிறப்புப் பயிற்சிக்கான செலவினங்களைக் கருத்தில் கொண்டு, அறிக்கை செய்பவர்கள் அந்தந்த சேவைகளிலிருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுவார்கள்.மேலும் அந்தப் பணியாளர்களை வெளியேற்றுவதன் மூலம் அந்தத் துறைகளில் செயல்பாடுகளைப் பராமரிப்பதில் ஏற்படும் சிரமங்கள் இந்த பொது மன்னிப்பு காலத்திற்கு பொருந்தாது.

        அ.    இராணுவத்தில் பொது மன்னிப்பு பொருந்தாத பகுதிகள்,

            i. பொதுச் சுகாதார பரிசோதகர்கள்
            ii. பல் சிகிச்சை நிபுணர்கள்
            iii. பல் அறுவை சிகிச்சை உதவியாளர்கள்
            iv. மின்காந்த வரைவாளர்
            v. ஆய்வுகூட தொழில்நுற்பவியலாளர்கள்
            vi. தாதியர்கள்
            vii. கண் மருத்துவர்கள்
            viii. அறுவை சிகிச்சை அறை தொழில்நுட்பவியலாளர்கள்
            ix. மருந்தாளர்கள்
            x. மருந்து கலவையாளர்கள்
            xi. உடற்பயிற்சி சிகிச்சையாளர்கள்
            xii. சீரமைப்பு மற்றும் பதனப்படுத்தல்
            xiii. தொழில்சார் சிகிச்சையாளர்கள்
            xiv. மின்பிரிகை நிபுணர்கள்
            xv. கதிர்வீச்சியலாளர்கள்
            xvi. ஸ்மார்ட் சாதனங்கள்
            xvii.

தச்சு வேலையாளர்கள்

                   

    ஆ.    கடற்படையில் பொது மன்னிப்பு பொருந்தாத பகுதிகள்,

            i.   அனைத்து வகைகளிலும் உள்ள தொழில்நுட்பவியலாளர்கள்
            ii.   தொழில்துறை மருத்துவர்கள்/  தொழில்துறை பல் மாலுமிகள்

        

    இ.    விமானப்படையில்  பொது மன்னிப்பு பொருந்தாத பகுதிகள்,

               i.     விமானப் பொறியியல் பணியகத்தின் கீழ் பின்வரும் பிருவுகளில் உயர்தர தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை முடித்த பிறகு 12 வருட சேவையை நிறைவு செய்யாதவர்கள்,

              (அ).   விமான  தொழில்நுட்ப நிபுணர்கள்
              (ஆ).   விமான இயந்திர தொழில் நிபுணர்கள்
              (இ).   விமான மின் மற்றும் கருவி தொழில்நுட்ப நிபுணர்கள்
              (ஈ).   விமானப் பாதுகாப்பு உபகரண உதவியாளர்கள்

               

               ii.     சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் செயற்படும் பின்வரும் பிரிவுகள்

                       (அ).     அங்கீகரிக்கப்பட்ட தாதியர்கள்
                       (ஆ).     மின்காந்த வரைவாளர்கள்
                       (இ).    மின்னாற்பகுப்பு தொழில்நுட்பவியலாளர்கள்
                       (ஈ).    மருந்தாளர்கள்
                       (உ).    மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள்
                      (ஊ).      உயிரியல் தொழில்நுட்பவியலாளர்கள்
                       (எ).     விமானப்படை மருத்துவ பரிசோதகர்கள்
                       (ஏ).     கதிரியக்க நிபுணர்கள்

               iii.     பல் சேவை தொழில்கள்

                       (அ).    அங்கீகரிக்கப்பட்ட தாதியர்கள்
                       (ஆ).    கதிரியக்க நிபுணர்கள்
                       (இ)     அறுவை சிகிச்சை அறை தொழில்நுட்பவியலாளர்கள்
                       (ஈ).     விஷேட பல் உதவியாளர்கள்
                       (உ).     விஷேட பல் மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள்
                       (ஊ).    பல் மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள் (I)
                       (எ).    பல் சிகிச்சை நிபுணர்கள்


4.    தற்போது வெளிநாட்டில் உள்ள முப்படை வீரர்கள் பின்வரும் நிபந்தனைகளுக்கு இணங்க அந்தந்த படைப்பிரிவுகளுக்கு பிரசன்னமாகாமல் சேவையில் இருந்து விடுவிப்பு பெற முடியும்.

       அ .  சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்ள விரும்புவோர், அனுமதியற்ற விடுப்பில் இருந்த குற்றத்தைத் தவிர, அவர்களுக்கு எதிராக எந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளும் நிலுவையில் இருக்கக்கூடாது.

       ஆ.  அவர்கள் மோசடியாகத் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை உபயோகித்து அல்லது சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என்பதை குடிவரவுத் திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

       இ.  அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய வெளிநாட்டுப் கற்கைநெறிகள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களால் முப்படைகளுக்கு வழங்கப்படும் கற்கைநெறிகள் மற்றும் இராஜதந்திர பணிகள் அல்லது வேறு ஏதேனும் தேவைகளுக்காக வெளிநாடு சென்று உரிய காலப்பகுதிக்குள் நாடு திரும்பத் தவறியவர்களுக்கு இந்த பொதுமன்னிப்பு பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5.    மேலும், தற்போது வெளிநாட்டில் இருக்கும் முப்படை வீரர்கள் , அந்தந்த நாட்டில் நிறுவப்பட்ட இலங்கைத் தூதரகத்தால் சான்றளிக்கப்பட்ட பவர் ஆஃப் அட்டர்னியை இலங்கையின் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள தகுதிவாய்ந்த வழக்கறிஞர் அல்லது அதற்கு நிகரான அதிகாரியின் மூலமாக இந்த பொது மன்னிப்பு காலத்தில் அவர்களின்  சேவையில் இருந்து விடுவிப்பு பெற முடியும்