தீக்கவாப்பி தூபியின் புனர்நிர்மான பணிகளுக்கு ரூ.5 மில்லியன் நன்கொடை

டிசம்பர் 23, 2020

ஸ்ரீ சம்போதி விகாரையின் விகாராதிபதியும்  பௌத்தய தொலைக்காட்சி சேவையின்  தலைவருமான பொரலாந்த  வஜிரக்ன தேரோ, தீக்கவாப்பி தூபியின்  புனர்நிர்மான பணிகளுக்காக 5 மில்லியன் ரூபா நிதியினை நன்கொடையாக வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள  தொல்பொருள் மரபுரிமைகளை  முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின்  தலைவர் என்ற வகையில்  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன குறித்த நன்கொடையை பெற்றுக் கொண்டார்.

தீக்கவாப்பி தூபியின்  புனர்நிர்மானத் திட்டத்திக்கு  பிரதமரும், புத்தசாசன, மத, கலாசார அலுவல்கள் அமைச்சருமான  கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, தீக்கவாப்பி விகாரையில் அடிக்கல் நாட்டிவைத்தமை குறிப்பிடத்தக்கது.