இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

மே 02, 2024

இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (மே 02) இடம்பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த கடற்படையின் பிரதம அதிகாரி அமைச்சர் தென்னக்கோன் அவர்களினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அத்துடன் கடற்படை பிரதம அதிகாரியின் நியமனம் குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வை குறிக்கும் வகையில் இருவருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.