2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பெளத்த தியான நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

மே 03, 2024

களனியில் உள்ள நாகாநந்தா சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தினால் இன்று (மே 03) ஏற்பாடுசெய்யப்பட்ட உலகளாவிய பெளத்த தியான நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கலந்து கொண்டார்.

 கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் வண. உதரியகம தம்மஜீவ தேரர் ஆகியோரின் வலிகாட்டலின் கீழ் சத்தி பாசல் அறக்கட்டளை மற்றும் கல்வி அமைச்சு இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (மே 03) ஆரம்பமான இந்த இரண்டு நாள் நிகழ்வின் ஆரம்ப நிகழ்விற்கு கல்வி அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வு பாடசாலை மாணவர்களின் மன ஆரோக்கியத்தைப் பயிற்றுவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்தில் ஒரு முக்கியமான படியாக நடத்தப்படுகிறது.