பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

டிசம்பர் 23, 2020

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் அதிமேதகு எரிக் லவர்து  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (டிசம்பர்.23) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் மற்றும் பிரான்ஸ் தூதுவர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.