பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள்
குழு பாதுகாப்பு அமைச்சிக்கு விஜயம்

மே 06, 2024

எயார் கொமடோர் பைசல் முஹம்மத் கான் தலைமையிலான பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (மே 6) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தது.

பாதுகாப்பு அமைச்சிக்கு விஜயம் செய்த தூதுக்குழுவினரை தேசிய புலனாய்வுப் பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க (ஓய்வு) வரவேற்றதுடன், பின்னர் அவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் பதில் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) ஹர்ஷ விதானாரச்சி, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் பாரூக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.