புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் தென்னகோன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றார்

மே 18, 2024

இலங்கை வந்தடைந்த புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவரும் உலக சமாதான தூதுவருமான குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் இன்று (மே 18) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.

இந்த வரவேற்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமானும் இராஜாங்க அமைச்சருடன் வரவேற்றார்.

மே 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் குருதேவ், மே 19ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவுள்ள இசை, தியானம் மற்றும் ஞானத்தின் மாலை’ என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.