--> -->

ஈட்டி எறிதலில் இலங்கை இராணுவ வீரர் உலக சாதனை படைத்தார்

மே 22, 2024

ஜப்பானின் கோபி நகரில் நடைபெற்றுவரும்  பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் பங்கேற்கும் இலங்கை இராணுவ வாரண்ட் அதிகாரி II K.A சமித துலான் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்தார்.

இராணுவ ஊடக தகவல்களின் படி WO II துலான் ஈட்டி எறிதல் F-44 பிரிவில் 66.49 மீ தூரம் எறிந்து உலக சாதனை படைத்தார். மேலும் அவர் பாரா ஈட்டி எறிதல் போட்டியில் (F-44/F-64) வெள்ளிப் பதக்கத்தை வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோபி 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப்போட்டி 17 மே அன்று தொடங்கி 25 மே அன்று முடிவடையும்.