2024 புத்தரஷ்மி வெசாக் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் சிறப்பு தியான நிகழ்ச்சி நடைபெற்றது

மே 22, 2024

'புத்தரஷ்மி வெசாக் விழா 2024' முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் சிறப்பு தியான நிகழ்ச்சி ஒன்று இன்று (மே 22) நடத்தப்பட்டது. அமைச்சின் நிர்வாகப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த சமய நிகழ்வு இடம்பெற்றது.

ஹோமாகம தம்மகுசல தேரரால் சமயச் சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கக்து. இந்நிகழ்வில் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) காமினி மஹகமகே, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான அமைச்சுப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.