இவ்வருட தியவன்னா வெசாக் வலயம் 2024யினை பெருமளவிலான மக்கள் கண்டுகளித்தனர்
மே 25, 2024தியவன்னா வெசாக் வலயம் 2024 இன்று (மே 25) தொடர்ந்து மூன்றாவது நாளாக டென்சில் கொப்பேகடுவ மாவத்தை மற்றும் பத்தரமுல்ல பாதுகாப்பு அமைச்சின் வீதியை உள்ளடக்கி இன்று மாலை ஆரம்பமானது. கடந்த இரண்டு நாட்களாக வெசாக் வலயத்திற்கு பெருமளவான மக்கள் வருகை தந்துள்ளனர்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெசாக் வலயத்தை சம்பிரதாயபூர்வமாக ஒளியேற்றினார். அத்துடன் தியவன்னா வெசாக் வலய 2024இல் தெரிவுசெய்யப்பட்ட மிகவும் ஆக்கப்பூர்வமான வெசாக் விளக்குக்கான பணப் பரிசில்களையும் இதன்போது வழங்கினார்.
இதன்படி, இலங்கை இராணுவப் பொறியியலாளர்கள் படையணியினால் வடிவமைக்கப்பட்ட வெசாக் விளக்கு முதலாம் பரிசைப் பெற்றதுடன், இலங்கை இராணுவ ஆயுதப் படையணி இரண்டாவது பரிசினை பெற்றுக்கொண்டது. இலங்கை விமானப்படையின் பாலாவி நிலையம் மூன்றாம் இடத்தை வென்றது. நெஸ்லே லங்கா நிறுவனம் பரிசுகளுக்கு அனுசரணை வழங்கியது குறிபிடத்தக்கது.
இவ்வருடத்தின் மிகவும் கவர்ச்சியான வெசாக் கொண்டாட்ட நிகழ்வின் இறுதி நாள் இன்றாகும். மேலும், தியவன்னா வெசாக் வலயமானது வெசாக் விளக்குகள் மற்றும் அலங்கார வெளிச்சங்களின் அற்புதமான காட்சிகளைக் கொண்டுள்ளது.
அலங்கார விளக்குகளுக்கு மேலதிகமாக, இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கலாச்சார குழுக்களின் பக்தி கீ (மத பக்தி பாடல்கள்) தியவன்னா வெசாக் வலயத்தின் சிறப்பை மேம்படுத்துகின்றன.