புதிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோனை சந்தித்தார்

மே 29, 2024

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு மேஜர் ஜெனரல் ஃபஹீம்-உல்-அஸீஸ் (ஓய்வு) அவர்கள் இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (மே 29) இடம்பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை அமைச்சர் தென்னக்கோன் வரவேற்றதுடன், இருதரப்பு முக்கிய விடயங்கள் குறித்தும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் பாரூக் அவர்களும் கலந்து கொண்டார்.