--> -->

தற்போது நாட்டில் நிலவும் பருவமழை மேலும் தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்

மே 29, 2024

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையானது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (மே 29) காலை வெளியிடப்பட்ட அதன் சமீபத்திய வானிலை அறிக்கையில், தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால், நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சுமார் 2.5 மீ – 3.5 மீ உயரம் வரை அலைகள் அதிகரித்து நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, கல்பிட்டியிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோர கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்புடன் காணக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

மேலும், கனமழை காரணமாக களு, ஜின் மற்றும் நில்வலா நதிகளின் பல கிளை ஆறுகளிலும் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், முப்படையினர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர் மற்றும் அதன் விரைவு நடவடிக்கைகளுக்கான படகுப் படைப்பிரிவின் உறுப்பினர்கள், காலியில் பத்தேகமவில் ஜின் ஆற்றின் மேல் உள்ள தொடம்கொட பாலத்தின் கீழ் வெள்ளத்தினால் ஏற்பட்ட குப்பைகளால் அடைக்கப்பட்டிருந்த அடைப்பை அகற்றி சீரான நீரோட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும், வெள்ள நீரானது கணிசமான அளவு குப்பைகளை கீழ்நோக்கி கொண்டு செல்கிறது. இது பாலங்களுக்கு அடியில் அடைத்து, சீரான ஓட்டத்தை கட்டுப்படுத்துவதுடன் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அச்சுறுத்தலை ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.தற்போது நாட்டில் நிலவும் பருவமழை மேலும் தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையானது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (மே 29) காலை வெளியிடப்பட்ட அதன் சமீபத்திய வானிலை அறிக்கையில், தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால், நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சுமார் 2.5 மீ – 3.5 மீ உயரம் வரை அலைகள் அதிகரித்து நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, கல்பிட்டியிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோர கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்புடன் காணக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

மேலும், கனமழை காரணமாக களு, ஜின் மற்றும் நில்வலா நதிகளின் பல கிளை ஆறுகளிலும் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், முப்படையினர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர் மற்றும் அதன் விரைவு நடவடிக்கைகளுக்கான படகுப் படைப்பிரிவின் உறுப்பினர்கள், காலியில் பத்தேகமவில் ஜின் ஆற்றின் மேல் உள்ள தொடம்கொட பாலத்தின் கீழ் வெள்ளத்தினால் ஏற்பட்ட குப்பைகளால் அடைக்கப்பட்டிருந்த அடைப்பை அகற்றி சீரான நீரோட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும், வெள்ள நீரானது கணிசமான அளவு குப்பைகளை கீழ்நோக்கி கொண்டு செல்கிறது. இது பாலங்களுக்கு அடியில் அடைத்து, சீரான ஓட்டத்தை கட்டுப்படுத்துவதுடன் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அச்சுறுத்தலை ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.