துப்பாக்கி சுடும் விளையாட்டு யூடியூப் சேனலின் தொடக்க நிகழ்வில்
பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

மே 30, 2024

‘Scorpion Top Shot’ யூடியூப் சேனலின் தொடக்க நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வு தலவத்துகொடையில் அமைந்துள்ள கிராண்ட் மோனார்க் வரவேற்பு மண்டபத்தில் புதன்கிழமை (மே 29) நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை யூடியூப் சேனலின் ஸ்தாபகரான லெப்டினன்ட் கேர்ணல் ஜானக ரிட்டிகஹபொல (ஓய்வு) வரவேற்றார்.

இந்த சேனலானது நாட்டில் துப்பாக்கி சுடும் விளையாட்டினை ஊக்குவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன அவர்கள்,

துப்பாக்கி சுடும் விளையாட்டின் முன்னாள் சாம்பியன் வீரரான லெப்டினன்ட் கேர்ணல் ரிட்டிகஹபொல (ஓய்வு)) விளையாட்டில் மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்த முன்முயற்சி எடுத்ததற்காகவும், மேலும் குறித்த விளையாட்டை பிரபலப்படுத்த யூடியூப் சேனலை ஆரம்பித்ததற்காகவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, சிரேஷ்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.