--> -->

தேசிய மாணவ படையணியினருக்கு நிதி கல்வி தொடர்பான
பாடத்தை உள்வாங்க நடவடிக்கை

மே 31, 2024

தேசிய மாணவ படையணியினருக்கு (NCC) அவர்களது பாடத்திட்டத்தில் நிதி கல்வியறிவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

சமூகத்தின் நிதி நிர்வாகத்தில் சேமிப்பு இல்லாமை, தயக்கம் அல்லது பொருத்தமான முதலீடுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பிரமிட் திட்டங்கள் போன்ற மோசடிகளில் சிக்குவது போன்ற பல சிக்கல்களைக் கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

அமைச்சர், இது தொடர்பாக ஏற்கனவே இலங்கை வங்கியின் தலைவர் திரு. காவண் ரத்நாயக்கவுடன் கலந்துரையாடியுள்ளார்.

அதற்கமைய அவர் தேசிய மாணவ படையணியினருக்கு பயிற்சி மற்றும் அறிவுப் பகிர்வு உதவிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.