பாதுகாப்பு அமைச்சின் புதிய மேலதிக செயலாளராக (பாதுகாப்பு)
ஹர்ஷ விதானாராச்சி நியமனம்

ஜூன் 01, 2024

பாதுகாப்பு அமைச்சின் புதிய மேலதிகச் செயலாளராக (பாதுகாப்பு) திரு.ஹர்ஷ விதானாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை நேற்று (மே 31) பெற்றுக்கொண்டார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட தர அதிகாரியான திரு.விதானாராச்சி, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது சேவையில் பல அமைச்சுக்களிலும், சுவீடனில் உள்ள இலங்கைத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் பதில் மேலதிகச் செயலாளராக (பாதுகாப்பு) பணியாற்றினார்.