--> -->

ஆழ்கடலில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆறு மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

ஜூன் 03, 2024

இலங்கைக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் இருந்து சுமார் 480 கடல் மைல் (சுமார் 889 கிமீ) தொலைவில் உள்ள ஆழ் கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய நிலையில் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் வெளிநாட்டுக் கப்பலொன்று மூலம் மீட்கப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகொன்றில் இருந்த 06 இலங்கை மீனவர்களும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 02) கடற்படையினரால் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், மே 31ஆம் திகதி ‘MT TONEGAWA’ என்ற வணிகக் கப்பலால் மீட்கப்பட்ட இந்த ஆறு (06) மீனவர்களை காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் கடற்படையின் விரைவுத் தாக்குதல் கப்பல் மூலம் விரைவாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil