அமெரிக்க இராணுவ பசுபிக் பிரதி கட்டளைத் தளபதி (மூலோபாயம் மற்றும் திட்டங்கள்) பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜூன் 04, 2024

அமெரிக்க இராணுவ பசுபிக் பிரதி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸ்காட் ஏ. வின்டர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூன் 04) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சிக்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் வின்டரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், பின்னர் முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கடல்சார் கள விழிப்புணர்வு, கடல் வழிகள் மூலம் மனித கடத்தல் மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதில் இரு நாடுகளின் பரஸ்பர பொறுப்புகள் குறித்தும் இரு உயர் அதிகாரிகளும் முக்கிய கவனம் செலுத்தினர்.

தேசிய புலனாய்வுப் பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.