ஆசியாவில் இடம்பெற்ற இரசாயன ஆயுதங்கள் மாநாட்டின் 22வது பிராந்தியக் கூட்டத்தில் இலங்கையும் பங்கேற்றது
ஜூன் 06, 2024ஆசிய பிராந்திய இரசாயன ஆயுத மாநாட்டுடன் தொடர்புடைய பிராந்தியங்களின் தேசிய அதிகாரிகளின் 22வது பிராந்திய மாநாடு 2024 மே 29 முதல் 31 வரை உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் இரசாயன ஆயுத உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபையின் பணிப்பாளர் ரியர் அட்மிரல் (கலாநிதி) ரவி ரணசிங்க இந்நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்.
உறுப்பு நாடுகளில் நிறுவப்பட்ட இரசாயன ஆயுத மாநாட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தேசிய பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இந்த பிராந்திய மாநாடு இடம்பெற்றது.
மேலும், இம்மாநாட்டின் மூலம் அதிகாரசபையின் தேவைகள், முன்னுரிமைகள், தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் இரசாயன ஆயுதங்களை செயல்படுத்துவது தொடர்பான சிறந்த நடைமுறைகளை செயற்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தேசிய அதிகாரசபையின் பணிப்பாளர் “இலங்கையில் திட்டமிடப்பட்ட இரசாயனங்களின் சட்டவிரோத பரிமாற்றங்களைத் தடுப்பது” என்ற தலைப்பில் ஒரு தகவல் விளக்கத்தை வழங்கியதுடன், பிராந்திய நிபுணர்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.