செய்தி வெளியீடு

ஜூன் 07, 2024
  • ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) மருத்துவ இளங்கலை மற்றும் அறுவைசிகிச்சை இளங்கலை (MBBS) பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு சிவில் மாணவர்களை அனுமதித்தல்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலகை்கழகத்தின் MBBS பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு சிவில் மாணவர்களை அனுமதிப்பது குறித்து கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலகை்கழகம் தெளிவுபடுத்துகிறது.

KDU பல்கலைழக்கழகத்தின் மருத்துவ பீடம் 2009 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது. முக்கியமாக இலங்கையின் ஆயுதப் படைகளில் மருத்துவர்கள் இல்லாதுள்ள பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்காக இதன் MBBS பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டம் 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. எவ்வாறாயினும், ஆயுதப்படைகளில் அத்தகைய தேவைகள் படிப்படியாக நிறைவேறியதையடுத்து, தேவையான அதிக அந்நியசெலாவணியை நாட்டிற்கு 2013 ஆம் ஆண்டு முதல் ஈட்டித்தரும்  இலங்கை வெளிநாட்டவர்களின் சிவில் மாணவர்களை MBBS பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனுமதிக்கவும் தொடங்கியது.

மேலும், 2017 ஆம் ஆண்டில் மொத்தம் 864 சிவில் மாணவர்கள் தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவகத்தில் (SAITM) MBBS பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்காக பதிவுசெய்யப்பட்டு இருந்தனர்.

அத்துடன், 2022ஆம் ஆண்டில், 2022 ஆம் ஆண்டில், தேசிய பல்கலைக்கழகங்களின் சேர்க்கை அளவுகோல்/கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக எழுந்த சிக்கலைத் தீர்க்கும் முகமாக MBBS பட்டப்படிப்புக்காக 87 சிவிலியன் மாணவர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவிலிருந்து அனுப்பப்பட்டனர்.

அதற்கிணங்க, மொத்தம் 1337 சிவில் மாணவர்கள் KDU பல்கலைக்கழகத்தின் MBBS பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 828 மாணவர்கள் 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் பட்டமளிக்கப்பட்டுள்ளனர். KDU பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் வாய்ப்புகள் கிடைக்கக்கூடியதாகவுள்ளதால், ஆயுதப் படைகளின் தேவையான கெடெட் மருத்துவ அதிகாரிகளை சேர்த்த பின்னர், பயனுள்ளவாறு பயன்படுத்தப்படுவதில்லை. ஒருபுறம் நாடு மருத்துவ தொழில் நிபுணர்களுக்கான பற்றாக்குறையை எதிர்நோக்குகின்ற வேளையில் மருத்துவ பீடத்தினதும் பல்கலைக்கழக வைத்தியசாலையினதும் (UHKDU) நிதி முதலீடுகளும், உட்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் மனித வளங்களும் வீணாகுகின்ற நிலை ஏற்படும்.

2024ஆம் ஆண்டிலிருந்து கட்டணம் அறவிடும் அடிப்படையில் MBBS பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு உள்நாட்டு சிவில் மாணவர்களை அனுமதிப்பதற்கு தேவையான அங்கீகாரத்தை வழங்க அமைச்சரவை 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி ஒரு கொள்கைத் தீர்மானத்தை எடுத்தது. அதற்கிணங்க, க.பொ.த. (உயர் தரம்) பரீட்சைத் தகைமைகளை அல்லது அதற்கு சமனான கேம்பிரிஜ் எடெக்ஷல் பரீட்சை மற்றும் அது போன்ற ஏனைய வெளிநாட்டுப் பரீட்சைத் தகைமைகளை உடைய சாத்தியமான பரீட்சாத்திகளிடமிருந்து விண்ணப்பங்களை அழைக்கின்ற ஒரு விளம்பரம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்திலும் மற்றும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தேசிய செய்திப்பத்திரிகைகளிலும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிரசுரிக்கப்பட்டது.

மேலே உள்ள விளம்பரம் தகுதி சார்ந்த தகவுதிறன்களையும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியையும் குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து, மொத்தம் 956 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியளவில் கிடைத்திருந்தன. அத்தகைய விண்ணப்பதாரர்களின் பட்டியல் அவர்களின் Z-மதிப்பெண்களுடன் அல்லது வெளிநாட்டுப் பரீட்சைத் தகைமை பெறுபேறுகளுடன் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

கூறப்பட்ட விண்ணப்பங்களை தேர்ந்தெடுத்த பின்னர், தகுதி வாய்ந்த 868 பரீட்சாத்திகளில், மொத்தம் 242 பரீட்சாத்திகள் பொது உளர்சாப்புப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக‘ அனுமதிகள் குழுவினால்’ தேர்ந்தெடுத்துப் பட்டியல்படுத்தப்பட்டனர். உள்நாட்டு க.பொ.த. (சா/த) பரீட்சைப் பெறுபேறுகளை உடைய பரீட்சாத்திகள் 1.4059 என்ற ஆகக்கூடிய Z-மதிப்பெண்ணைப் பயன்படுத்தி, 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏனைய அரச பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் MBBS பட்டப்படிப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் நுழைவதற்காக UGC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியல்படுத்தப்பட்டனர்.

வெளிநாட்டுப் பரீட்சைத் தகைமகளை உடைய பரீட்சாத்திகள் A மற்றும் B என பெற்ற ஆகக்குறைந்த தரங்களைப் பயன்படுத்தி பட்டியல்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு ஒதுக்கிய எண்ணிக்கை கிடைத்த விண்ணப்பங்களின் விகிதத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க, 216 மற்றும் 26 பரீட்சாத்திகள் முறையே இந்த இரண்டு வகுதிகளிலிருந்தும் தகுதி பெற்றிருந்தனர்.

பாட அறிவும், நுண்ணறிவும் (IQ) மற்றும் பொது அறிவும் பற்றிய பல்தேர்வு வினாக்களுடைய (MCQs) வினாத்தாள் 1, ஆங்கில மொழி பற்றிய வினாத்தாள் 2 மற்றும் சைக்கோமெட்ரிக் மதிப்பீடு பற்றிய வினாத்தாள் 3 ஆகிய மூன்று (03) பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பொது உளர்சாப்புப் பரீட்சை பல்கலைக்கழக வளாகத்தில் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி நடத்தப்பட்டது. மொத்தம் 203 பரீட்சாத்திகள் (க.பொ.த. சா/த பரீட்சைத் தகைமைகளை உடைய 183 உள்நாட்டுப் பரீட்சாத்திகள் மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைத் தகமைகளை உடைய 20 பரீட்சாத்திகள்) இந்தப் பொது உளர்சாப்புப் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இந்தப் பரீட்சாத்திகள் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம், 21 ஆம், 22 ஆம் திகதிகளில் நடைபெற்ற கட்டமைந்த நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அதற்கிணங்க, க.பொ.த. சா/த பரீட்சைத் தகைமைகளை உடைய 158 உள்நாட்டுப் பரீட்சாத்திகளும் வெளிநாட்டுப் பரீட்சைத் தகமைகளை உடைய 20 பரீட்சாத்திகளும் முறையே இந்த கட்டமைந்த நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

KDU பல்கலைக்கழகத்தின் உள்ளகப் பதவியணியின் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையும் மற்றும் இலங்கை மருவத்துவ சங்கத்தையும் அவதானிப்பாளர்களாக பிரதிநிதிப்படுத்திய பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு நேர்முகப் பரீட்சைக் குழு KDU இன் முகாமைத்துவ சபையால் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டது. கட்டமைந்த நேர்முகப் பரீட்சையில், க.பொ.த. (உ/த) பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அல்லது வெளிநாட்டுத் தகுதிப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு 90% வீதம் எனவும் மற்றும் தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள விளையாட்டு செயற்பாடுகள், நிறூபனமாகிய தலைமைத்துவப் பண்புகள் மற்றும் திறன்கள் போன்ற ஏனைய சாதனைகளுக்கு 10% வீதம் எனவும் புள்ளிகள் ஒதுக்கி வழங்கப்பட்டன.

KDU பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் MBBS பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியான தகவுதிறன்களும், அனுமதிகள் குழுவின் உறுப்பினர்களும், கட்டமைந்த பொது உளர்சாப்புப் பரீட்சையும், நேர்முகப் பரீட்சைக் குழுவின் உறுப்பினர்களும் மற்றும் இறுதித் தேர்வுக்கான புள்ளிகளை ஒதுக்கி வழங்கலும் பற்றிய விபரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

KDU பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் MBBS பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்தைப் பின்பற்றுவதற்காக தேர்ந்தெடுத்த பரீட்சாத்திகளின் விபரங்களும் மற்றும் பதிவுசெய்யப்பட்ட நேரத்தில் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு தேர்ந்தெடுத்த பரீட்சாத்திகளை தேவைப்படுத்துகின்ற நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்த விபரமும் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்கூறிய தெளிவுபடுத்தலின் விளக்கத்தில், பரீட்சாத்திகளை தேர்ந்தெடுப்பதில் நிகழக்கூடிய ஏதாவது முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கும், தேர்ந்தெடுக்கும் செயல்முறையின் நேர்மையையும், வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்யும் நல்லாட்சிக் கோட்பாட்டை மேம்படுத்துவதற்கும் KDU தன்னால் இயன்ற எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளது என்பது புலனாகுகின்றது. மேலும், எவரேனும், பரீட்சாத்தியொருவர், பொய்யான தகவல்களை வழங்கியுள்ளார் என தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கண்டறியப்பட்டால், பல்கலைக்கழகம், அந்தப் பரீட்சாத்திற்கும் மற்றும் பல்கலைக்ழகத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் நியதிகளுக்கு இணங்க அந்தப் பரீட்சாத்தியின் மாணவர் உறுப்புரிமையை முடிவுறுத்த நடவடிக்கை எடுக்கும்.

நலன்விரும்பிகள் வழங்கிய ஆதரவுக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகம் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்பும் இந்தத் தருனத்தில், KDU பல்கலைக்கழகத்தின் MBBS பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு சிவில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான செயல்முறை நேர்மையாகவும், நியாயமாகவும் மற்றும் சட்டமுறையானதாகவும் இருந்தது என்பதை பரீட்சாத்திகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும், மருத்துவ தொழில் நிபுணர்களுக்கும், பல்கலைக்கழக சமூகத்திற்கும் பொதுமக்களுக்கும் உத்தரவாதம் அளிக்கவும் விரும்புகின்றது.