"2024 இல் இலங்கையின் பொருளாதார பாதுகாப்பு – கண்ணோட்டம் மற்றும் அபாய மதிப்பீடு செய்தல்" எனும் தொனிப்ப பொருளில் வட்டமேசை கலந்துரையாடல்

ஜூன் 13, 2024

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் (INSS) “2024 இல் இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பு – கண்ணோட்டம் மற்றும் அபாய மதிப்பீடு செய்தல்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்த வட்டமேசை கலந்துரையாடல் இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் நந்திமித்ர கேட்போர்கூடத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 06) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிகாரியாக வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை ஐ.என்எஸ்.எஸ் நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் கேர்ணல் நலின் ஹேரத் அன்புடன் வரவேற்றார்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்டு செயல்பாடும் ஐ.என்.என்.ஸ் நிறுவனம் தேசிய பாதுகாப்பு குறித்த முதன்மை கற்கைகள் நிறுவனமாகும்.

கேட்வே ஹவுஸின் (இந்திய கவுன்சில் உறவுகள்) பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பேராசிரியரும், ஐக்கிய இராச்சியத்தின் ODI இல் வருகை தரும் மூத்த உறுப்பினருமான கலாநிதி கணேசன் விக்னராஜா அமர்வை நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர, உபவேந்தரும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வணிகப் பொருளாதாரப் பிரிவின் தலைவருமான சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி. கருணாரத்ன மற்றும் வறுமைப் பகுப்பாய்வு நிலையத்தின் (CEPA) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஹேரத் குணதிலக போன்ற பல வல்லுநர்கள் இக்கலந்துரையாடலில் போது சிறப்புரையாற்றினர்.

மதிப்பீட்டாளரின் அறிமுகத்தைத் தொடர்ந்து, கலாநிதி சந்திரநாத் அமரசேகர சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் முக்கிய அம்சங்களை ஆய்வு செய்து விளக்கமளித்தார். உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதங்கள், பொருளாதார ஸ்திரத்தன்மை, மாற்று விகிதங்கள் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய கடந்தகால சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை விவரித்தார். மூத்த பேராசிரியர் எச்.டி. கருணாரத்ன, கல்வி சீர்திருத்தங்கள், முதியோர் மக்கள் தொகை மற்றும் திறன் வெளியேற்றம், கல்வி தரம், வள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தொழில்முறை அமைப்பு ஒழுங்குமுறை ஆகியவற்றில் உள்ள சிக்கல்களை முன்னிலைப்படுத்துவதில் நடுத்தர கால சவால்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

கலாநிதி ஹேரத் குணதிலக்க, நெருக்கடிகளின் விளைவான வறுமை குறித்து கவனம் செலுத்தினார், மேலும் ‘சமுர்த்தி’ திட்டத்திற்கு மாற்றாக ‘அஸ்வசும’ முயற்சியின் நுண்ணறிவு மற்றும் வறுமைக் குறிகாட்டியாக மின்சார நுகர்வு சாத்தியமான பயன்பாடு ஆகியவை தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்.

அதன் பின் நடந்த கேள்வி பதில் நேரத்தின் போது, பார்வையாளர்ககளின் கேள்விகளுக்கு பேச்சாளர்கள் பதிலளித்தனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) காமினி மஹகமகே, மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) ஹர்ஷ விதானாரச்சி, தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர, முன்னாள் இராஜதந்திரிகள், பொருளாதார நிபுணர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஐ.என்.எஸ்.எஸ் ஊழியர்கள் மற்றும் முப்படைகள் அதிகாரிகள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.