இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹார நியமனம்

ஜூன் 20, 2024

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹார நியமிக்கப்பட்டுள்ளார்.

2024 ஜூன் மாதம் 20ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
 
இலங்கை இராணுவத்தில் 35 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான முறையில் பணியாற்றிவரும் மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹார, ​​இலங்கை இராணுவத்தில் அட்ஜுடண்ட் ஜெனரல் மற்றும் பாதுகாப்பு படைத் தளபதி (மத்திய) உட்பட பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் அலுவிஹார விஜயபாகு காலாட்படை படைப்பிரிவின் (கேர்ணல் ஒப் த ரெஜிமன்ட்) பொறுப்பதிகாரியாகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.