வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது தடவையாக அமெரிக்க ஆட்கடத்தல் அறிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது

ஜூன் 25, 2024

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆட்களைக் கடத்தல் (TIP) அறிக்கையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இரண்டாவது நிலையை அடைந்து இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

இந்த குறிப்பிடத்தக்க சாதனையானது மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கும் நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. துகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான தேசிய மனித கடத்தல் தடுப்புப் பணிப் படை (NAHTTF) இந்தச் சாதனையில் முக்கிய பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய மனித கடத்தல் தடுப்புப் பணிப் படையனியின் தலைவரான பாதுகாப்புச் செயலாளர் இதற்கான வழிகாட்டல் மற்றும் மூலோபாய வழிகாட்டல்களை வழங்கிவருகின்றார். மேலும் இது மனித கடத்தலுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்தில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துகிறது.