ஆட்கடத்தல் தொடர்பான பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி உப குழுவிற்கான இரண்டாவது கூட்டம் இடம்பெற்றது
ஜூன் 27, 2024ஆட்கடத்தல் தொடர்பான பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி உப குழுவிற்கான இரண்டாவது கூட்டம் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற்றது.
தேசிய புலனாய்வு பிரதானியும், இலங்கையின் ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் உத்தியோகபூர்வ குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க சிறப்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து BIMSTEC இன் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் எம் டி மொஷரப் ஹொஸைன் (MD Mosharaf Hossain) சிறப்புரை ஆற்றினார். மேலும், இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளர் திருமதி சாரா லூ அரியோலாவும் தனது கருத்துக்களை இதன்போது வெளிப்படுத்தினார்.
பிம்ஸ்டெக் BIMSTEC இன் உறுப்பு நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் வங்காள விரிகுடா பகுதியில் ஆட் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான பிற குற்றங்களை தடுக்க தங்கள் நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் சட்ட முறைகள் குறித்து இங்கு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
வங்காள விரிகுடா பிராந்தியத்தில் ஆட் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான செயல்திட்டம், ஆட்கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் மேலும் ஒத்துழைப்புடனும் ஒத்துழைப்போடும் செயல்படுவதை எதிர்நோக்குவதற்காக நாடுகளுக்கு இடையிலான தரப்புக்களை பிம்ஸ்டெக்கின் மேற்கூறிய செயல் திட்டத்தை தீர்மானம் செய்வதற்கான கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் போது, BIMSTEC உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வங்காள விரிகுடா பகுதியில் ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான பொதுவான திட்டத்தின் அவசியம் பற்றியும் கலந்துரையாடினர்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஆட்கடத்தலுக்கு எதிரான இலங்கை தேசிய செயலணியின் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.