மருத்துவ காரணங்களுக்காக சேவையில் இருந்து ஓய்வு பெற்ற படைவீரர்களின் கொடுப்பனவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்
ஜூன் 28, 2024சேவையில் ஈடுபட்டிருந்த போது பல்வேறு குறைபாடுகள் காரணமாக சேவையில் இருந்து ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற படைவீரர்கள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனை அவர்களை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (ஜூன் 26) இடம்பெற்றது.
இதன்போது மருத்துவ வாரியம் மூலம் தங்களின் அங்கவீனத்தை நிர்ணயித்து தற்போது வழங்கப்படும் 10% உதவித்தொகையை 20% ஆக உயர்த்த தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கைக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், ஊனமுற்ற போர்வீரர்களின் மரணத்தின் பின்னர் அவர்களது குடும்பங்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும், அவர்களின் வாழ்நாள் முழுவதும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் பாரிய செலவீனங்களைச் செய்து வருவதுடன் 55 வயதிற்குப் பிறகு இறந்த போர் வீரர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும், யுத்தத்தின் பின்னரும் உயிரிழந்த இராணுவத்தினரின் மனைவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்ந்தும் வழங்கப்படுவதுடன், எதிர்காலத்திலும் தொடர்ந்தும் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இக்கலந்துரையாடலின்போது முன்வைக்கப்பட்ட உண்மைத் தன்மைகளின் அடிப்படையில் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் சம்பளம் தொடர்பில் முரண்பாடுகள் இருப்பின் புள்ளிவிபரங்களை ஆராய்ந்து உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பார்கள் என எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.