இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இரசாயன ஆயுத மாநாட்டு வழிகாட்டல் நிகழ்ச்சி கொழும்பில் நடைபெற்றது

ஜூலை 02, 2024

இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு (OPCW) இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வழிகாட்டல் நிகழ்ச்சி ஜூன் 24 முதல் 28 வரை கொழும்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் போது, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு சேவைகள்) ஜயந்த எதிரிசிங் ஹவுடன் மலேசிய அதிகாரிகள் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பு, இரசாயன ஆயுதக் கட்டுப்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மனப்பான்மை மற்றும் பகிர்ந்து கொள்ளப்பட்ட இலக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டியது.

இரசாயன ஆயுதங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபையின் (NACWC) பணிப்பாளர் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்கவினால் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மலேசிய NACWC இன் துணைச் செயலாளர் கலாநிதி ராஜா சுப்ரமணியம் மலேசியக் தூதுக்கு குழுவிற்கு தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சித்திட்டம் OPCW விதிமுறைகளை திறம்பட செயல்படுத்துவதில் இரு நாடுகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட கலந்துரையாடல் அமர்வுகளை உள்ளடக்கியது. இரசாயன ஆயுதங்கள் மாநாடு (CWC) சட்டம், CWC வர்த்தகம் மற்றும் சுங்கக் கட்டுப்பாடு, இரசாயன பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகள், இரசாயன ஆயுதங்கள் கண்டறிதல் மற்றும் ஆய்வக தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் மற்றும் CWC உடன் தேசிய இணக்கத்தை மேம்படுத்துவதற்கான உத்திகள் ஆகியவை திட்டத்தின் போது உள்ளடக்கப்பட்ட தலைப்புகள்.

இந்த நிகழ்ச்சியின் போது இலங்கையின் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (ITI-SL) விஜயம் செய்யும் சந்தர்ப்பம் இரு நாட்டு அதிகாரிகளுக்கும் கிடைத்தது. இந்த வருகையானது எதிர்கால OPCW நிபுணத்துவ சோதனைகளில் கலந்துகொள்வதற்கான நிறுவனத்தின் திறன்களை பகுப்பாய்வு செய்வதையும், அறிவு மற்றும் நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழிகாட்டல் நிகழ்ச்சி OPCW கட்டமைப்பிற்குள் இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையே நடந்து வரும் ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இதன் போது CWCயின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பான மற்றும் அமைதியான உலகை நோக்கிச் செயல்படுவதற்கும் இரு நாடுகளும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.