--> -->

கதிர்காம பாத யாத்திரையில் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இணைந்துகொண்டார்

ஜூலை 06, 2024

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித்த பண்டார தென்னகோன் வருடாந்த கதிர்காம பாத யாத்திரையை மேட்கொண்டார். இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தொடர்ந்து ஆறாவது முறையாக இவ்வருடம் இப்பாத யாத்திரையை மேட்கொண்டுள்ளார்.

இலங்கை மற்றும் தென்னிந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள், வடக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து தெற்கே கதிர்காமம் வரை நடைபயணம் மேற்கொள்கின்றனர். இந்த யாத்திரை கதிர்காம கடவுளுக்காக செய்யப்படும் ஒரு முக்கிய பாரம்பரிய சடங்காகும். பாதயாத்திரையை மேட்கொள்ளும் பக்தர்கள் நீண்ட பயணத்தை மேற்கொண்டு யால தேசிய பூங்காவையும் கடந்து கதிர்காமத்தை வந்தடைகின்றனர்.

இராஜாங்க அமைச்சருடன் பாத யாத்திரையில் அமெரிக்க தூதரக மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர்களும் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள், பொலிஸ் மற்றும் வனவிலங்குபாதுகாப்பு அதிகாரிகளும் இந்த பாத யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, நலன்புரி மற்றும் உயிர்காக்கும் சேவைகள் உட்பட தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி உதவுகின்றனர்.