புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு.

ஜூலை 08, 2024

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில டோலகே இன்று (ஜூலை 08) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது, பாதுகாப்புச் செயலாளர், மேஜர் ஜெனரல் கபில டோலகே அவர்களுக்கு பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளைத் தளபதியாக நியமனம் பெற்றதிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் டோலகே அவர்கள் (ஜூன் 26), 2024 அன்று பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 10வது கட்டளைத் தளபதியாக தனது கடமைகளை பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.