இந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தை பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

ஜூலை 10, 2024

இந்திய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சரண்ஜீத் சிங் தேவ்கன் தலைமையிலான இந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தை பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை இன்று (ஜூலை 10) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இந்தியக் குழுவினரை வரவேற்றதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் இராணுவப் பயிற்சி வாய்ப்புகள் தொடர்பான விடயங்கள் குறித்து இறுதரப்பினரும் சுமூகமாக கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் போது, கேர்ணல் நிதின் யாதவா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேர்ணல் மந்தீப் சிங் நேகி ஆகியோரும் கலந்துகொண்டனர்.