சீஷெல்ஸ் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானி
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

ஜூலை 16, 2024

சீஷெல்ஸ் நாட்டின் மக்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானி பிரிகேடியர் மைக்கல் ரொசெட் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்னை சந்தித்தார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (ஜூலை 16) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த பிரிகேடியர் ரொசெட் அவர்களை அமைச்சர் தென்னக்கோன் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு பாதுகாப்பு அதிகாரிகளும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.